முள்ளிக்குளம் நிலமீட்புப் போராட்ட மக்களை ஆளுநர் திடீரெனச் சந்தித்து பேச்சுவார்த்தை

மன்னார் முள்ளிக்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளை இன்று (31) திடீரெனச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கும் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட கூரே முள்ளிக்குளம் மக்களுடைய கோரிக்கைகளை அரசாங்கத்திடம் உடனடியாக தெரிவிப்பதாக உறுதியளித்திருக்கிறார்.
இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை பயிற்சி முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 23 ஆம் திகதி காலை ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று எட்டாவது நாளாகவும் தொடர்ந்த நிலையிலேயே மேற்படி திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இரவு கடும் குளிர் மத்தியிலும், விசப்பூச்சிகளின் மத்தியிலும் ஒவ்வொரு ராத்திரியையும் கழித்து வருகின்றனர். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த போராட்டத்தில் குதித்துள்ளனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கடற்படையினர் பல்வேறு வகையில் அச்சுரூத்தி வருவதாகவும் அந்த மக்கள் குற்றம் சாட்டியும் வருகின்றனர்.
குறித்த மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அருட்தந்தையர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.இதன் போதே கடற்படையினர் தம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடற்படையினர் தம்மை தொடர்ச்சியாக புகைப்படம் எடுப்பதாகவும், கருத்துக்களை வழங்குபவர்களுடைய விபரங்களை திரட்டுவதாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த போராட்டத்தை உடனடியாக கைவிடாது விட்டால் நீங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என கடற்படை எச்சரிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் தெரிவித்தள்ளனர். கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்க மாட்டோம், போக்குவரத்து சேவைகளை இடை நிறுத்துவோம், மலங்காட்டில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற குடி நீர் வசதியை நிறுத்தவோம் என பல்வேறு வகையிலும் தம்மை அச்சுறுத்துவதாக அந்த மக்கள் கவலை தெரிவித்தனர்.
கடற்படை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களை அச்சுறுத்தினாலும், தொடர்ந்தும் எமது நிலம் மீட்கப்படும் வரை போராடுவோம் என அந்த மக்கள் தெரிவித்தனர். அமைதியான முறையில் தமது உரிமைக்காக போராடும் மக்களை யார் அச்சுறுத்தினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பொலிஸார் பலர் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கடற்படைக்கு பாதுகாப்பு வழங்குகின்றார்களா? அல்லது மக்களை அச்சுரூத்தும் வகையில் செயற்படுகின்றார்களா?என்பது தெரியவில்லை.
இவ்வாறு போராட்டத்தை கைவிடுமாறு கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே வடக்கு மாகாண ஆளுநருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடைய பிரதிநிதிகளுக்குமிடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போது மக்களுடைய பிரச்சனைகள் ஆளுநருக்கு எடுத்துக்கூறப்படு மக்களுடைய காணிகளை விடுவிக்குமாறும் கோரப்பட்டது. இது தொடர்பில் கருத்துக்களை கேட்ட ஆளுநர் மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com