முல்லை ஆக்கிரமிப்புக்கு அரசின் பதில் என்ன? – நிருபா குணசேகரலிங்கம்

mullaithivu (3)
நாட்­டி­லேயே அதிக வறுமை கார­ண­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள முல்­லைத்­தீவு மாவட்டம், இன்றும் தொடர் சிக்­கல்­க­ளையே சந்­தித்து நிற்­கின்­றது. இரா­ணு­வத்­தி­னரால் காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டுதல், வெளி­மா­வட்ட கடற்­றொ­ழி­லா­ளர்­களின் அத்­து­மீ­றல்கள், இன விகி­தா­சா­ரத்­தினைப் பாதிக்கும் வகை­யி­லான குடி­யேற்­றங்கள் என மக்­களைப் பாதிக்கும் விட­யங்கள் அங்கு நீண்டு கொண்டே செல்­கின்­றன.
படை­யி­ன­ருக்­காக காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டுதல் இவ்­வாரம் முல்­லைத்­தீவு மக்­களை அச்­சு­றுத்தும் மற்­றுமோர் பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது. புதுக்­கு­டி­யி­ருப்பு, நாயாறு, சுதந்­தி­ர ­புரம், விசு­வ­மடு பிர­தே­சங்­களில் பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு சுவீ­க­ரிப்­ப­தற்­காக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன.
அதன்­படி, புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச செய­ல­கத்­திற்கு முன்னாள் உள்ள 30 ஏக்கர் நிலம் இரா­ணு­வத்­தி­னரின் தேவை­க­ளுக்­காக நில அளவை செய்­யப்­பட இருந்­தது. எனினும், பொது மக்­க­ளி­னதும் மாவட்­டத்தின் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் எதிர்ப்­பினால் இந் நட­வ­டிக்­கைகள் இறு­தியில் கைவி­டப்­பட்­டுள்­ளன.
விசு­வ­மடு தொட்­டி­யடி பகு­தியில் 18 ஏக்கர் காணியை இரா­ணு­வத்­தி­ன­ருக்குச் சுவீ­க­ரிப்­ப­தற்­காக அளவை செய்ய எடுக்­கப்­பட்ட முயற்­சியும் சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா எம்.பி. மற்றும் அங்கு திரண்ட பொது­மக்­க­ளினால் தடுக்­கப்­பட்­டுள்­ளது.
இந் நிலங்கள் 1971 காலப்­ப­கு­தியில் படித்த வாலிபர் திட்­டத்தில் பொது­மக்­க­ளுக்குப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட நிலங்­க­ளாகும். இவை வன்­னியில் வள­மிக்க நிலங்­க­ளாக உள்­ள­தனால் அவற்­றினை இரா­ணு­வத்­தினர் அப­க­ரிக்க முயற்­சிக்­கின்­றனர் என முல்­லைத்­தீவு மக்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.
முல்­லைத்­தீவில் இடம்­பெறும் காணி அப­க­ரிப்புச் சம்­ப­வங்­களைத் தொடர்ந்து புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச செய­லகம் முன்­பாக மக்கள் உண்­ணா­வி­ரதப் போராட்டம் ஒன்றை இவ்­வாரம் நடத்­தினர். இப்­போ­ராட்­டத்தில், இரா­ணு­வமே மக்­களின் நிலங்­களை அப­க­ரிக்­காதே, அரச அதி­கா­ரிகள் இரா­ணு­வத்­தி­னரின் நில அப­க­ரிப்­பிற்கு துணை­போகக் கூடாது, இரா­ணு­வமே வெளி­யேறு போன்ற கோஷங்­களை முன்­வைத்து போராட்­டத்­தினை மக்கள் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். போராட்­டத்­தினைத் தொடர்ந்து அரச அதி­கா­ரிகள், மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாது என உத்­த­ர­வா­த­ம­ளித்­த­தனால் போராட்டம் முடி­வு­றுத்­தப்­பட்­டது.
இப் போராட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்தன் மற்றும் சிவ­மோகன் ஆகி­யோரும் மக்­க­ளுடன் கலந்து கொண்­டனர்.
மேலும், விசு­வ­மடு பாரதி வித்­தி­யா­ல­யத்­திற்குச் சொந்­த­மான இரண்டு ஏக்கர் காணியில் இரா­ணு­வத்­தினர் நிலை­கொண்டு, அங்கு விவ­சாய முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக முல்­லைத்­தீவு மாவட்ட வட மாகாண சபை உறுப்­பினர் ரவி­கரன் குற்­றச்­சாட்­டினை முன்­வைத்­துள்ளார். அடிப்­ப­டையில் பாட­சா­லை­க­ளுக்கு அருகில் இரா­ணுவம் நிலை­கொள்ள வேண்­டி­யதன் அவ­சியம் இல்­லா­த­போதும் அதனைத் தடுத்து நிறுத்த இன்றும் முடி­ய­வில்லை.
mullaithivu (8)
வட்­டு­வா­கலில் தனி­யா­ருக்குச் சொந்­த­மான 379 ஏக்கர் நிலங்­க­ளையும் மிகுதி அரச நிலத்­தி­னையும் கொண்­ட­தாக அறு­நூ­றுக்கு மேற்­பட்ட ஏக்கர் நிலங்­களை தனக்குள் கொண்டு கடற்­படை முகாம் அமைந்­துள்­ளது. இம் முகாம் தற்­போது மேலும் பலப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இச் சம்­ப­வங்கள் காணி­களை இரா­ணுவ முகாம்கள் கார­ண­மாக இழந்­துள்ள மக்­க­ளுக்கு அவ­நம்­பிக்­கை­க­ளையே ஏற்­ப­டுத்­து­கின்­றன.
மீன­வர்கள் கட­லுக்குச் செல்­வ­தற்­கான பாதை­யினை வழி மறிப்­ப­தாக முல்­லைத்­தீவு வட்­டு­வாய்க்கால் பகு­தியில் உள்ள கடற்­படை முகாம் அமைந்­துள்­ளது. இதனால் தாம் பாதிக்­கப்­ப­டு­கின்றோம் என்­ப­தனை அண்­மையில் முல்­லைத்­தீ­விற்கு விஜயம் செய்த கடற்­றொழில் அமைச்­சரின் கவ­னத்­திற்குக் கடற்­றொ­ழி­லா­ளர்கள் கொண்டு வந்­தனர். எனினும், அதற்குத் தீர்­வுகள் வழங்­கப்­ப­டாது. மாறாக, அக் கடற்­படை முகாமில் இது­வரை காணப்­பட்ட தற்­கா­லிக வேலி நிரந்­த­ர­மா­ன­தாக மாற்­றி­ய­மைக்­கப்­ப­டு­கின்­றது.
இவ்­வா­றாக, முல்­லைத்­தீவில் இரா­ணுவ ரீதி­யி­லான விஸ்­த­ரிப்­புக்கள் உச்சம் பெற்­றுள்­ளன. பொது மக்­களின் காணிகள் அவர்­க­ளுக்கே சொந்­த­மா­னது. அவை எதிர்­வரும் மூன்று மாதங்­க­ளுக்குள் விடு­விக்­கப்­படும் என ஜனா­தி­பதி யாழில் வைத்துக் குறிப்­பிட்­டி­ருந்தார். அர­சாங்­கத்­திற்­கான சர்­வ­தே­சத்தின் ஆலோ­ச­னை­க­ளிலும் இரா­ணு­வத்­தி­ன­ரி­ட­மி­ருந்தும் மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்டே வரு­கின்­றது. எனினும், முல்­லைத்­தீவைப் பொறுத்­த­ளவில் நிலை­மைகள் மோச­ம­டைந்தே செல்­கின்­றன. கடந்த மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­துடன் ஒப்­பி­டு­கையில், யாழ்ப்­பா­ணத்தில் ஒரு­வாறு குறிப்­பிட்ட ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­ப­டு­கின்­றன தான். எனினும், வெளி­யு­லகின் கவ­னத்­தினை ஈர்க்­காத முல்­லைத்­தீவு போன்ற மாவட்­டங்­களில் இரா­ணுவ மய­மாக்­கத்­தினை விலக்கிக் கொள்­வதில் முன்­னேற்­றத்­தினைக் காண முடி­ய­வில்லை. இந்த இடத்தில் தான் முல்­லைத்­தீவு உட்­பட போரினால் பாதிக்­கப்­பட்ட வன்னி மாவட்­டங்­களின் பிரச்­சி­னைகள், ஊட­கங்­க­ளிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் வெகு­வாகப் பேசப்­பட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.
இரா­ணு­வத்­தி­ன­ருக்­கான காணி அப­க­ரிப்பு என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, மேலும் பல நல்­லி­ணக்­கத்­தினைப் பாதிக்கும் விட­யங்­களும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் நடந்­தேறு­கின்­றன.
முல்­லைத்­தீவில் உள்ள கொக்­கிளாய் பிர­தே­சத்தில் தனியார் காணிக்குள் விகாரை அமைக்கும் பணிகள் நடை­பெ­று­கின்­றன. ஸ்ரீ சம்­போதி எனப்­படும் இவ் விகாரை அமைக்கும் ஆரம்­ப­கட்டப் பணிகள் 2012 இலேயே ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதனைத் தொடர்ந்து உரி­மை­யாளர் 2015 இல் காணிப்­பி­ணக்­கு­களைத் தீர்க்கும் நட­மாடும் சேவையில் குறித்த காணி தன்­னு­டை­யது என­பதைத் தெரி­வித்து முறை­யிட்­டி­ருந்தார். அதி­கா­ரி­களும் காணி உரி­ய­வ­ருக்குச் சொந்­த­மா­னது என்­ப­தனை ஏற்­றுக்­கொண்­ட­போதும் அத்­து­மீ­றிய வகையில் விகாரை அமைக்கும் பணிகள் இங்கு தொடர்ந்­து­கொண்டே தான் இருக்­கின்­றன.
சிங்­களக் குடி­யேற்­றங்­களை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களும் முல்­லைத்­தீவில் கச்­சி­த­மாக இடம்­பெ­று­கின்­றன.
mullaithivu (11)vikarai
அண்­மைய நாட்­களில் முல்­லைத்­தீ­விற்கு வரு­கை­ தந்­தி­ருந்த வீட­மைப்பு அமைச்சர் சஜித் பிரே­ம­தாச, மண­லாறு பகு­தியில் வீட்­டுத்­திட்டம் ஒன்றைத் திறந்து வைத்­தி­ருந்தார். சம்பத் துவர இசு­று­பாய என்று அழைக்­கப்­படும் இவ் வீட்­டுத்­திட்­டத்தில் 24 வீடுகள் உள்­ளன. இப் பகு­தி­களில் சிங்­கள மக்கள் திட்­ட­மிட்டே குடி­யேற்­றப்­பட்­டனர். அர­சியல் நோக்கில் திட்­ட­மிட்ட இன விகி­தா­சா­ரத்­தினை ஏற்­ப­டுத்­துதல், தமிழர் தாயகம் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் வடக்குக் கிழக்­கினை துண்­டா­டுதல் போன்ற நோக்­கங்­க­ளுக்­காவே இங்கு சிங்­கள மக்­களின் குடி­யேற்­றங்கள் ஊக்­கு­விக்­கப்­பட்­டன. எனவே, இவ்­வா­றான சர்ச்­சை­யுள்ள சிங்­களக் குடி­யேற்­றங்­களை விஸ்­த­ரிப்­பதோ அல்­லது பலப்­ப­டுத்­து­வதோ நல்­லி­ணக்­கத்­திற்­கான உத்­தி­யாக அமை­யாது. இச் செயற்­பா­டுகள் மூலம் இன முரண்­பா­டு­க­ளையே வளர்க்க முடியும் என்­பதை அர­சாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முல்­லைத்­தீவில் கடற்­றொ­ழி­லா­ளர்­களும் தொழில் ரீதியில் பல பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­கின்­றனர். வேறு மாவட்­டங்­களில் இருந்­து­வரும் சிங்­கள கடற்­றொ­ழி­லா­ளர்கள் முல்­லைத்­தீவு கடற்­றொ­ழி­லா­ளர்­களின் கடற்­றொழில் முயற்­சி­களை ஆக்­கி­ர­மிக்­கின்­றனர். நாயாற்றுப் பகு­தியில் கடற்­க­ரையில் வாடி வீடு­களை அமைத்­துக்­கூட பிற மாவட்­டங்­களின் கடல்­தொ­ழி­லா­ளர்கள் மீன்­பி­டியில் ஈடு­ப­டு­கின்­றனர். இவர்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் அரச அதி­கா­ரி­க­ளுக்கும் பிரச்­சினை உள்­ளது. அத்­து­மீறித் தொழிலில் ஈடு­படும் கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளுக்கு இரா­ணு­வத்­தினர் பக்க பல­மாக இருந்து வரு­கின்­றனர். இதனால் இப் பிரச்­சினை சாதா­ர­ண­மாக பேசித் தீர்க்­க­மு­டி­யாத தளம் ஒன்­றி­லேயே உள்­ளது.
mullaithivu (12)vikarai
முல்­லைத்­தீவு மீன­வர்கள் தாம் தொழில் செய்­வ­தற்­காக ஒரு பட­கினை கொண்டு வரு­வ­தாயின், கிராம சங்­கத்­தி­ட­மி­ருந்து அனு­மதி எடுக்­கப்­பட வேண்டும். மீன்­பிடித் திணைக்­க­ளத்தில் அனு­மதி எடுக்க வேண்டும். என்­றெல்லாம் அமுலில் பல சட்­டங்­களும் நிய­தி­களும் உள்­ளன. எனினும் அத்­து­மீறி கடல்­தொ­ழிலில் ஈடு­ப­டுவோர் எந்த அனு­ம­தியும் இன்றி தொழில் முயற்­சி­களில் ஈடு­ப­டத்­தக்­க­தாக சூழ்­நி­லையே காணப்­ப­டு­கின்­றன. அத்­து­மீறும் கடற்­றொ­ழி­லா­ளர்கள் சிங்­க­ள­வர்­க­ளாக இருப்­ப­தனால் சிங்­க­ள­வர்­க­ளுக்கு சலுகை வழங்­கப்­ப­டு­கின்­றது என்ற குரோதம் முல்­லைத்­தீவு மக்­க­ளி­டையே முற்­றி­யுள்­ளது. இது ஓர் இன முறு­க­லுக்­கான சாத்­தி­யங்­க­ளையே கடல்­தொ­ழி­லாளர் மட்­டத்தில் உரு­வாக்கும். இந்­நி­லைமை நல்­லி­ணக்­கத்­திற்கு மிகவும் ஆபத்­தான விட­ய­மாகும். எனவே நியா­ய­மான முறையில் இவ்­வி­ட­யத்தில் அர­சாங்கம் உட­ன­டி­யாகச் செயற்­பட வேண்டும்.
போரின் பின்னர் முல்­லைத்­தீவு கடல்­தொ­ழி­லா­ளர்­களின் தொழில் சொத்­து­ரி­மையும் கப­ளீ­கரம் செய்­யப்­பட்­டுள்­ளது. கடல் தொழிலில் கரை வலைப்­பா­டு­க­ளுக்­கான உரி­மங்கள் முக்­கி­ய­மா­ன­வை­யாகும். இவ் உரி­மங்கள் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்டு உரித்­துப்­ப­டுத்­தப்­படும். அவற்றில் கூட போருக்குப் பின்னர் பல முறை­கே­டுகள் இடம்­பெற்­றுள்­ளன. தமிழ் மக்­களின் பெயர்­களில் 1983 காலப்­ப­குதி வரையில் காணப்­பட்ட கரை­வ­லைப்­பா­டுகள் மோச­டி­யான முறையில் போரின் பின்­பாக சிங்­க­ள­வர்­க­ளுக்கு உரிமை மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளன. தமிழ் மக்கள் யுத்­தத்தின் கார­ண­மாக கொக்­கிளாய், அளம்பில் மற்றும் இதர பகு­தி­களில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட நிலை­யி­லேயே அநேக கரை­வ­லைப்­பா­டுகள் சிங்­கள மக்­களின் உட­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ண­மாக, முன்னர் எல்லைக் கிரா­ம­மாகக் காணப்­பட்ட கொக்­கி­ளாயில் 12 கரை­வ­லைப்­பா­டுகள் காணப்­பட்­டன. அவற்றில் 1983 இல் தமி­ழர்­க­ளுக்கே 11 கரை­வ­லைப்­பா­டுகள் காணப்­பட்­டன. தற்­போது அவற்றின் உரி­மங்கள் பல்­கிப்­பெ­ரு­கி­யுள்­ள­துடன் சிங்­கள கடல்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்குப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றாக இன­ரீ­தியில் இடம்­பெற்ற மோச­டிகள் நீதி­யான முறையில் விசா­ரிக்­கப்­பட்டு தீர்­வுகள் முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும்.
இவற்­றை­யெல்லாம் நோக்­கு­கையில் முல்­லைத்­தீவு மாவட்ட மக்கள் எக்­கச்­சக்­க­மான பிரச்­சி­னை­க­ளுடன் ஓர் கடின வாழ்க்­கை­யி­னையே வாழ்­கின்­றனர். போரின் பின்­பாக சகல வகை­யிலும் சிக்­கல்­களை எதிர்­கொண்டு நிற்கும் மக்­க­ளுக்கு நடை­மு­றையில் உள்ள அர­சாங்கம் தீர்வைக் கொடுக்க முன்­வ­ருமா என்ற எதிர்­பார்ப்பு சக­ல­ரி­டத்­திலும் உள்­ளது. இறு­திப்போர் இடம்­பெற்ற போதும் முல்­லைத்­தீவு மாவட்­டமே ஒப்­பீட்­ட­ளவில் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டது. இவ்­வா­றாகப் பாதிக்­கப்­பட்ட மாவட்டம் போரின் பின்­பான 7 ஆண்­டு­க­ளிலும் அதி­கூ­டிய வறு­மை­யுள்ள பிர­தேசம் என சர்­வ­தே­சத்­தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.நா.,மற்றும் உலக வங்கி என்பன இதனைக்கூறியுள்ளன. அவ்வாறாகப் பாதிக்கப்பட்ட மாவட்டம் ஒன்றின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் உச்ச கரிசனை அல்லவா காட்டவேண்டும்.
mullaithivu (9)
அண்மைய வாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், முல்லைத்தீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மக்களைச் சந்தித்து ஆராய்ந்திருந்தார். அதன் பின்பாக கேப்பாபுலவு மக்களை உரிய இடத்தில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடன் பேசித் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் அவர் உத்தரவாதம் அளித்துள்ளார். இந்த இடத்தில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் நல்ல சமிக்ஞை காட்டவேண்டியது நீதியான அணுகுமுறையாகும்.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் இயல்பு நிலையினை முன்னுரிமை அடிப்படையில் கட்டியெழுப்ப முதலில் அங்குள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதனை விடுத்து முல்லைத்தீவு மக்களுக்குள்ள பிரச்சினைகளை புறந்தள்ளுவது சாதாரணமாக சமூகப் பிரச்சினைகளுக்கு மாத்திரம் காரணமாக அமையாது. அது இன முரண்பாட்டை கூர்மையாக்கும். மக்களின் பிரச்சினைகள் நியாயபூர்வமாக அணுகப்படாமல் அல்லது தீர்க்கப்படாமல் மேல் மட்டத்தில் மாத்திரம் நல்லிணக்கம் பேசுவது காலத்தினை இழுத்தடிப்பதற்கான முயற்சியாகவே அமையும். அதற்கானதாக இன்றைய காலகட்டங்களும் அமையக் கூடாது.isurupura-1 mullaithivu (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com