முல்லைத்தீவு செல்வது எப்படி – மாகாண சபையில் தீட்டிய 30 நிமிடத் திட்டம்

முல்லைத்தீவு மாவடத்திற்கு செல்வதற்கு 30 நிமிடங்கள் வடமாகாண சபை உறுப்பினர்கள் திட்டம் தீட்டி இருந்தனர்.

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது.

அதன் போது , சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ள பகுதிகளுக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராய்வது என தீர்மானிக்கப்பட்டது.

முல்லைத்தீவுக்கு செல்வதற்கு யாழ்ப்பாண உறுப்பினர்கள் எங்கு வருவது, எப்படி போவது , போன்றும் ஏனைய மாவட்ட உறுப்பினர்கள் எப்படி எங்கே வருவது எனவும் , சபையில் இல்லாத உறுப்பினர்களுக்கு எவ்வாறு அறிவிப்பது அவர்களை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்றும் , உறுப்பினர்கள் பல திட்டங்களை முன் வைத்து கருத்துக்களை தெரிவித்தனர்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக எவ்வாறு முல்லைத்தீவு போவது என்பது தொடர்பில் உறுப்பினர்கள் விரிவாக ஆராய்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com