சற்று முன்
Home / செய்திகள் / முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையத்திற்குள் படம் எடுத்த ஊடகவியலாளர் கைது

முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையத்திற்குள் படம் எடுத்த ஊடகவியலாளர் கைது

வாக்களிப்பு நிலையத்திற்குள் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்றுவருகின்றது .

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றுவருகிறது .இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையம் ஒன்றில் வாக்களிப்பதனை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன .

குறித்த நபர் வாக்களிப்பு நிலையத்திற்குள் வாக்களிப்பது தொடர்பில் புகைப்படம் எடுத்து அதனை ஒரு ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அறிய முடிகின்றது .

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com