முற்றுப்புள்ளியா? படம் பார்த்த முதலமைச்சர் !!

(பதிவு செய்த நாள் – புரட்டாதி 19, 2015, 111.10 பி.ப) யாழ்ப்பாணத்தில் ஒருவார காலமாக நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்படவிழாவில் நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் யுத்தமும் அதன் பின்னான அவலங்களையும் தொட்டுச்செல்லும் செறீன் சேவியரின் முற்றுப்புள்ளியா? திரைப்படம் யாழ்ப்பாணம் சிலோன் திரையரங்கில் (கார்கில்ஸ் வளாகம்) நேற்று இரவு 7.00 மணிக்கு இலவச காட்சியாக காண்பிக்கப்பட்டது. படத்தின் இயக்குநர், நடிகர்கள் படத்தொகுப்பாளர் லெனின் ஆகியோர் கலந்துகொண்டிருந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சரும் திரையரங்கிற்கு் வந்திரந்தார்.

படம் பார்த்து முடித்தபின் எமது வாகீசம் இணையத்திற்குக் கருத்துத் தெரிவித்த அவர் தான் வி.ஐ.பி அந்தஸ்தில் அழைக்கப்படவில்லை எனவும் தான் அவ்வாறு கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவித்ததோடு கனடாவில் வசித்துவரும் இயக்குநரின் தந்தையர் தனது நண்பர் எனவும் அந்த நட்பின் பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த முதலமைச்சர் தான் பார்த்த முற்றுப்புள்ளியா ? திரைப்படம் தொடர்பான கருத்தையும் பதிவு செய்து சென்றிருந்தார்.

முற்றுப்புள்ளியா? திரைப்பத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்தியாவிலும் சில காட்சிகள் இலங்கையியும் படமாக்கப்பட்டிருந்தன. இத்திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதளை இந்திய அரசு வழங்காததால் இந்தியாவில் இத்திரைப்படம் திரையிடப்படவில்லை. இலங்கையிலும் முன்னைய மகிந்த அரசு இப்படத்திற்கு தடைவிதித்திருந்தபோதும் ரணில் விக்கிரமசிங்க மைத்திரிபால சிறிசேன கூட்டரசு சில தணிக்கைகளுடன் சர்வதேச திரைப்படவிழாவில் வெளியிட அனுமதி வழங்கியிருந்தது.

இதேவேளை முற்றுப்புள்ளியா? திரைப்படத்தைப்பார்க்க அதிகளவான மக்கள் குவிந்ததானால் பலர் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டனர். இதனால் அப்பகுதியில் முறுகல் நிலை ஒன்றும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds