மும்பை தொடர் ரயில் குண்டுவெடிப்பு: 12 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு!

மும்பை: மும்பையில் நடந்த ரயில் தொடர் குண்டு வெடிப்பில் 189 பேர் உயிரிழந்த வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மும்பை புறநகர் ரயில்களின் முதலாம் வகுப்பு பெட்டிகளில் 7 ஆர்டிஎக்ஸ் குண்டுகள் வெடித்தன. இதில் 188 பேர் உயிரிழந்தனர். 829 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 14 பேர் தலைமறைவாக உள்ளனர்.

குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

8 ஆண்டுகளாக நடைபெற்ற வந்து வழக்கில் 192 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள், 5 ஐஏஎஸ் அதிகாரிகள், 18 மருத்துவர்களும் அடங்குவர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை நிறைவுற்ற நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 12 பேர் குற்றவாளி என அறிவித்ததோடு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்துல் வாஹித் சாகிப் என்பவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கான  தண்டனை விவரம் வரும் 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் குண்டுவெடிப்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds