முன்பள்ளி மாணவர்களுக்கு சித்திரப்போட்டி திறமைக்கு வாய்ப்பு

மலையக பகுதிகளில் பிரிடோ நிறுவனத்தின் ஊடாக 195 இற்கு மேற்பட்ட முன்பள்ளிகள் இயங்கி வருகின்றது. சுமார் 03 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் தங்களது ஆரம்ப கல்வியை தொடர்கின்றனர்.

இச்சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் நிறுவனம் பல்வேறுப்பட்ட செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.

நிறுவன தலைவர் மைக்கல் ஜோக்கிம் வெளிகள இணைப்பாளர் எஸ். கே. சந்திரசேகரன் ஆகிய இருவரின் ஆலோசணையின் பேரில் பொகவந்தலாவ பிரதேசத்தில் கடந்த வாரம் முன்பள்ளியில் கல்வி கற்கும் சிறுவர்களுக்கு  ஆங்கில அறிவினை  வழங்கி போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டும் சிறுவர்களுக்கான பாராட்டு விழாவும் நடைப்பெற்றது.

மேலும் அக்கரபத்தனை, தலவாக்கலை, லிந்துலை, நானுஓயா, டயகம ஆகிய பிரதேசங்களில் இயங்கும் முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் சித்திரம் வரையும் திறனை அதிகரிக்கும் பொருட்டு சித்திரபோட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.

இப்போட்டிகளில் கலந்து கொண்ட முன்பள்ளி சிறுவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இப்போட்டிகள் தொடர்பாக நிறுவனத்தின் வெளிகள இணைப்பாளர் சந்திரசேகரன் தெரிவிக்கையில்,

மலையக சிறுவர்கள் மத்தியில் அதிகமான திறமைகள் உள்ளது அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பட்சத்தில்  அவர்களின் திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்பாக அமையும்.

இதனை கருத்தில் கொண்டு எமது நிறுவனம் பல்வேறுப்பட்ட செயல்பாடுகளை நடைமுறைபடுத்துவதுடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கபடுவதாகவும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஊடாக எதிர்காலத்தில் மலையக கல்வியில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார். IMG_6543 IMG_6544 IMG_6547 IMG_6548 IMG_6555

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com