முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை !

வடக்கின் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் உள்ள முன்பள்ளிகளிற்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் எழுத்துப்பரீட்சையில் தற்போது தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் தாம் பாதிக்கப்படுவதனால் உரியவர்கள் உடன் ஆவண செய்து உரிய தீர்வை வழங்க முன்வரவேண்டும் என பாதிக்கப்படும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சித் திணைக்களங்களின் கீழ் உள்ள 47 முன்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வடக்குமாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த ஆண்டு பகிரங்க விண்ணப்பம் கோரப்பட்டது. இதன் பிரகாரம் பலர் விண்ணப்பித்திருந்தனர்.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் ஏற்கனவே நீண்டகாலமாக குறித்த முன்பள்ளிகளில் தற்காலிக மற்றும் அமைய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களும் விண்ணப்பித்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களிற்கு எதிர்வரும் 7ம் திகதி போட்டிப் பரீட்சை இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான பரீட்சை அனுமதி அட்டைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த முன்பள்ளிகளில் கடந்த 10 தொடக்கம் 15 ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றும் எமக்கும் எழுத்துப் பரீட்சை என்ற நிலையில் அதற்கும் இணங்கினோம். அதற்கமைய விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளில் கல்வித் தகமை இல்லை என நிராகரித்தால் ஏற்க முடியும் மாறாக பலருக்கு வயது எல்லை காரணம் காட்டப்பட்டு பரீட்சைக்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது. அதாவது 25 , 30 வயதில் குறித்த பணிக்கு வந்து அற்ப சம்பளத்திற்கு பணியாற்றி நிரந்தர நியமனம் கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில் தற்போது எம்மில் பலருக்கு சந்தர்ப்பம் மறுக்கப்படுகின்றது.

எனவே எம்மையும் பரீட்சை எழுத அனுமதித்து நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தி எமது நியாயத்தை அமைச்சரவைக்கு கொண்டுசென்று விசேட அனுமதியின் பெயரில் குறித்த நியமனத்தை வழங்க ஆவண செய்ய வேண்டும். எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது ,

மேற்படி பணிநிலைக்கு 45 வயதிற்கும் உட்பட்டவர்களிற்கே நியமனம் வழங்கப்பட முடியும் எனச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதனால் 45 வயதினை தாண்ணியவர்களை பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.்எனத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com