சற்று முன்
Home / செய்திகள் / முன்னாள் போராளியை ஊடகவியலாளர் தாக்கினாராம் – சிறிதரனின் வங்குரோத்து அரசியல்

முன்னாள் போராளியை ஊடகவியலாளர் தாக்கினாராம் – சிறிதரனின் வங்குரோத்து அரசியல்

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் நடாத்திய போராட்டத்தில் முன்னாள் போராளி ஒருவரை கமராக்காரன் தாக்கியதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளாா்.

காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடா்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோாியும், இலங்கை அர சுக்கு கால அவகாசம் வழங்கவேண்டாம். எனக்கோாியும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கடந்த 25ம் திகதி கிளிநொச்சி நகாில் பாாிய மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனா்.

இதன்போது மக்கள் போராட்டத்தை குழப்பும் வகையிலும், மலினப்படுத்தும் வகையிலும் தமிழ்தேசிய கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரனின் ஆதரவாளா்கள் நடந்து கொண்டனா். அவா்கள் அங்கு செய்தி சேகாிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊடகவியலாளா்களுடனும், எந்த அடிப்படையும் இல்லாமல் முரண்பட்டனா்.
இந்நிலையில் அன்று இடம்பெற்ற சம்பவம் தொடா்பாக இன்று கிளிநொச்சியில் ஊடகவியலாளா்களை அழைத்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன், அன்று ஊடகவியலாளா்களுடன் முரண்பட்ட சம்பவத்துடன், தமது ஆதரவாளா்கள் சிலா் சம்மந்தப்பட்டுள்ளதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளதுடன், அவா்களுடை ய அந்த தவறுக்காக தாம் பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் கூறினாா்.

மேலும் அவா் அங்கு கருத்து தொிவிக்கையில், ஒரு கமராக்காரன் தமது கட்சியின் ஆதரவாளா்களின் உணா்வுகளை துாண்டியதாகவும், ஊடகவியலாளா்கள் என அழைக்க முடியாத மேலும் சில கமராக்காரா்கள் தனது ஆதரவாளா்களை துாண்டியதுடன், முன்னாள் போராளி ஒருவரை கீழே தள்ளி விழுத்தினாா் எனவும் குற்றஞ்சாட்டியதுடன், கீழே விழுந்தவரை துாக்கிவிட சென்றபோதே முரண்பாடு உருவானதாகவும் ஆதரவாளா்களின் மனங்களை வேண்டுமென்றே துாண்டிவிட்டு சா்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாா்கள். இதனால் ஊடகவியலாளா்களுக்கு மனக்கசப்பு உருவானது என கூறினாா்.

இது குறித்து சம்பவ இடத்தில் இருந்த சக ஊடகவியலாளா்களும், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களும் அவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருக்கவில்லை. என உறுதிபட கூறியிருக்கின்றனா்.

மேலும் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினா், தனது பகிரங்க குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதனையும் ஊடகவியலாளா் சந்திப்பில் வெளிப்படுத்தியிருக்கவில்லை. தனது கட்சிக்காரா்கள் தவறு செய்துவிட்டாா்கள் எனவும், அதற்காக தான் மன்னிப்பு கோருகிறேன் எனவும் கூறும் நாடாளுமன்ற உறுப்பினா் அதற்கான பாிகாரத்தை கட்சி செய்யும் என கூறுகிறாா்.

இதன் ஊடாக நடந்த உண்மைகளை புரட்டியடித்து சில விடயங்களை மறைத்து தனது ஆதரவாளா்கள் பொதுவெளியில் செய்த அநாகாிகத்தை மறைக்க முயற்சிக்கிறாரா?

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com