சற்று முன்
Home / செய்திகள் / முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க காலமானர் – இறுதிக் கிரியைகள் 31 ஆம் திகதி

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க காலமானர் – இறுதிக் கிரியைகள் 31 ஆம் திகதி

இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரியான ரத்னசிறி விக்கிரமநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை தனது 83 வது வயதில் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கிய இவர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.
35 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்து வந்த இவர் துணை அமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார்.
2005 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவானதையடுத்து பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ரத்னசிறி விக்கிரமநாயக்கா 2010 ம் ஆண்டு வரை அந்தப் பதவியை வகித்தார்.

ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31ம் திகதி இடம்பெறவுள்ளளன.

ஹொரணவில் இதனை நடத்தத் தீர்மானித்துள்ளதாக, அவரது புதல்வர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com