முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை – பாதுகாப்புச் செயலாளர்

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பிரபுக்களின் பாதுகாப்பு சட்ட ஒழுங்கு அமைச்சின் கீழேயே செயற்படுகிறது. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பொலிஸ் பிரிவினரே நியமிக்கப்படவேண்டும். எனினும் அன்றைய சூழ்நிலையில் நாட்டில காணப்பட்ட நிலை காரணமாக இராணுவத்தினரும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் தற்போது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரபு ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க முன்னர் முதலில் மதிப்பீடு செய்யப்படும். அதற்கமைய பல மாதங்களுக்கு முன்னரே மதிப்பீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய தற்போது இராணுவத்தினர் நீக்கப்பட்டு பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பொலிஸ் பிரிவில் பிரபுக்களின் பாதுகாப்புக்கென்றே பயிற்சியளிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதில் அதிரடிப்படையினரும் உள்ளடங்குவர். 103 பொலிஸார் மற்றும் 103 இராணுவத்தினர் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்துக்கமைய அவசர நிலையற்ற காலங்களில் சிவில் பாதுகாப்புக்காக இராணுவத்தினர் பயன்படுத்த முடியாது. புதிய மாற்றத்திற்கமைய முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக 256 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவருடைய பாதுகாப்பு மாற்றப்பட்டுள்ளதே தவிர குறைக்கப்படவில்லை என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds