முன்னாள் கடற்­படைத் தளபதி விரைவில் கைது!

கடற்­ப­டை­யினர் ஐந்து தமிழ் இளை­ஞர்­களை கடத்திச் சென்று கொலை செய்த சம்­பவம் தொடர்­பாக முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரன்­னா­கொ­டையை குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­களம் கைது செய்­ய­வுள்­ள­தாக சிங்­கள வார இத­ழொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

தமிழ் இளை­ஞர்­களை கடத்திச் சென்று திரு­கோ­ண­மலை கன்சைட் முகாமில் தடுத்து வைத்து கொடூ­ர­மாக சித்­த­ர­வதை செய்­த­தா­கவும் அங்கு அவர்­களைக் கொலை செய்­தமை தொடர்­பாக முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்த கரன்­னா­கொட அறிந்­தி­ருந்­த­தா­கவும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்பு, கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தின் முன்னால் இர­க­சிய பொலிஸார் குறிப்­பிட்­டுள்­ள­தா­கவும் அதன் படி முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com