சற்று முன்
Home / செய்திகள் / முன்னணி உறுப்பினர்களுக்கு மூளைச்சலவை – வீடு வீடாய் ஏறி இறங்கும் கங்கிரஸ் கஜாக்கள்

முன்னணி உறுப்பினர்களுக்கு மூளைச்சலவை – வீடு வீடாய் ஏறி இறங்கும் கங்கிரஸ் கஜாக்கள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அணியில் இருப்பதனால் அவர்களை தமது பக்கம் கொண்டுவரும் முயற்சியில் கங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

அரியாலையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு இன்று மாலை சென்ற கங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் அவருக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆசனம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியையும் வழங்கினர் என்று அறிய முடிகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி வி. மணிவண்ணனை தேர்தல் முடிவடைந்த கையோடு அவரது பதவிநிலைகளிலிருந்து கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் நீக்கினர்.

அதனையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் சட்டத்தரணி மணிவண்ணனுக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் தமது கட்சி உறுப்பினர்களை நீக்குவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைமை நாடியுள்ளது என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுதொடர்பில் அரியாலையைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினர், தமிழ் காங்கிரஸின் தலைவரிடம் கேட்டிருந்தார்.

எனினும் அந்தச் செய்தியை மறுத்த தலைவர், மாநகர சபை உறுப்பினர்களை தாம் நீக்கவேண்டிய தேவையில்லை என்று கூறியிருந்தார். அத்தோடு உறுப்பினர்களை சந்தித்து பேசவும் அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

மாநகர சபை உறுப்பினர்களை நீக்குவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவில் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தியில் உண்மையில்லை என்றால் அது தொடர்பில் ஊடக அறிக்கை வெளியிடுமாறு மாநகர சபை உறுப்பினர், தலைவரிடம் கேட்டிருந்தார்.

இந்த நிலையில் மற்றொரு உறுப்பினரின் வீட்டுக்கு இன்று மாலை சென்ற  கங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தேர்தல் காலத்தில் பிழையாகச் செயற்பட்டார் என்று பலவற்றைக் கூறியுள்ளனர்.

அத்தோடு தமது பக்கம் நின்றால் வரும் மாகாண சபைத் தேர்தலில் வேட்பு மனு வழங்குவதாகவும் அந்த உறுப்பினருக்கு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்று அறிய முடிகிறது.

அத்துடன், சட்டத்தரணி வி. மணிவண்ணனுக்கு சார்பாகச் செயற்படும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் வ.பார்த்திபன், மயூரன், தனுஷன் ஆகியோரை தாம் சந்திக்கமாட்டோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செல்வராஜா கஜேந்திரனும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் சிலருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கும் காங்கிரஸ் கட்சியின் சட்ட ஆலோசகர் ஒருவர், சிறப்பான எதிர்காலத்துக்காக தம்மோடு தொடர்ந்து இயங்குமாறு ஆலோசனை வழங்குகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com