முன்னணியை வீழ்த்த ஒன்றுசேர்ந்தவர்கள் வேலணையில் முட்டி மோதினர் !!

கூட்டமைப்பிற்கும் ஈபிடிபிக்குமிடையேயான உறவு கதிரைகளை கைப்பற்றிக்கொள்வதற்கானதேயென்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதை தடுக்க கூட்டமைப்பும் ஈபிடிபியும் சாவகச்சேரி நகரசபை மற்றும் பருத்தித்துறை நகரசபைகளில் கூட்டு சேர்ந்திருந்தன்.

ஆனால் இன்றைய தினம் வேலணை பிரதேசசபையின் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள கூட்டமைப்பும் ஈபிடிபியும் எதிர் எதிர் முட்டிமோதிக்கொண்டன.

பரஸ்பரம் இரண்டு தரப்புக்களும் இன்றைய வாக்கெடுப்பில் தலா 9 ஆசனங்களை பெற்றுக்கொண்டதையடுத்து குலுக்கல் முறையில் ஆட்சியாளரை தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. நடத்தப்பட்ட குலுக்கலில் ஈபிடிபி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வேலணைபிரதேசசபையின் தலைவராக நமசிவாயம் கருணாகரமூர்த்தி தெரிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.தீவகத்தின் ஊர்காவற்துறை பிரதேசசபையினை ஏற்கனவே ஈபிடிபி கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது மற்றொரு பிரதேசசபையான வேலணையும் இக்கட்சியிடம் சென்றுள்ளது.

அதேபோன்று நெடுந்தீவு பிரதேசசபையினையும் ஈபிடிபியே கைப்பற்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com