சற்று முன்
Home / செய்திகள் / முன்னணியும் முள்ளிவாய்க்கால் போகிறது

முன்னணியும் முள்ளிவாய்க்கால் போகிறது

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் உறுதியெடுப்பதற்காக எதிர்வரும் சனிக்கிழமை முள்ளிவாய்க்காலுக்கு செல்லவுள்ளனர்.

நடைபெற்ற முன்னணியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன்

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் உறுதிப்பிரமானம் எடுக்கும் நிகழ்வு முள்ளிவாய்க்கால் மண்ணில் சனிக்கிழமை இடம்பெற உள்ளதாகவும் நிகழ்விற்கு
கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கலந்து கொள்ளுமாறு கட்சியின் பொதுச் செயலாளர் கேட்டுள்ளர்.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தேசிய அரசியலில் தனது பயணத்தை முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த மண்ணிலிருந்து இன்று ஆரம்பித்திருக்கின்றார்.

இன்று காலை 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறிய மண்ணுக்கு சென்ற சீ.வி.விக்னேஸ்வரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பெருமளவு ஆதரவாளர்கள் குழுவினர்,
படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலிகளை செலுத்தியதுடன், சீ.வி.விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவுசுடர் முன்பாக சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com