முதுகெலும்பு இருந்தால் சம்பந்தன் பகிரங்க விவாதத்திற்கு வரட்டும் – கஜேந்திரகுமார் சவால்

சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருக்கிறது என்றால் சம்பந்தன் எங்களோடு பகிரங்க விவாதத்திற்கு வரட்டும் அவரால் பதில் தர முடியுமா எனப் பார்ப்போம் என பகிரங்க சவால் விடுத்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுமந்திரன் மக்களிடம் செல்லாமல் தன்னைப் பாதுகாப்பதற்காகவே கொலை அச்சுறுத்தல் எனும் நாடகமாடுவதாகவும் அந்த நாடகத்தின் ஊடாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணை அரசியல் பழிவாங்கல் செய்ய முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளர்.

22.02.2017 அன்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்தியிருந்த உரையில் தம் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு ஒன்றினை யாழ்-கந்தர்மடத்திலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் 23.02.2017 அன்று நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசு இழைத்த குற்றம் தனி மனித குற்றமாத்தான் கணிக்கப்படப்போகின்றது என்றால் போர்க்குற்றம் மனித இனத்திற்கு எதிரா குற்றம் என்ற விடையங்களைக் கைவிடுவதற்கான முயற்சியில் சம்பந்தன் ஈடுபடுவதாத்தான் நாங்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம்.
போர்க்குற்றம் மனித குலத்திற்கு எதிராக குற்றம் இனப்படுகொலை நிகழ்ந்திருக்கிறது என்றால் அதற்கு மன்னிப்பு கிடையாது. அதற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது ஐ.நாவின் விதிமுறை.
எங்கள் பிரதிநிதி என்று சொல்லக்கூடிய சம்பந்தன் இலங்கை பாராளுமன்றில் இது கட்டமைக்கப்பட்ட குற்றமாக தாம் பார்கவில்லை என ஒப்புக்கொண்டிருக்கின்றான். அவரது பேச்சினூடாக நடைபெறவேண்டிய பொறுப்புக் கூறலில் இருந்து விடுபிட்டு உண்மையைக் கண்டறிவதாற்கான கொமிசன் ஒன்றிற்கு அத்திவாரமிடுகின்றார் எனும் குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைக்கின்றோம்.

தம்ழ்த் தேசிய மக்கள் முன்னணி தேற்றுப்போன தரப்பு எனில் எங்களைப்பற்றி இவர் பாராளுமன்றில் கதைக்கவேண்டிய தேவை ஏன் என்று கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தம்மை சம்பந்தன் தீவிரவாதிகள் என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பாவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் தமிழ் மக்கள் பேரவையினதும் தீர்வுத்திட்டம் தீவிரவாதம் என்றால் சம்பந்தன் ஒற்றையாட்சிக்கும் 13 ஆம் திருத்தத்திற்கும் இணக்கியிருக்கின்றார் என்றுதானே அர்த்தம். ஒற்றையாட்சிக்குள்ளும் 13 ஆம் திருத்ததிற்குள்ளும்தான் தீர்வு அதைத் தாண்டி கேட்பவர்களை எப்படி இலங்கை அரசு தீவிரவாதிகள் என்கிறதோ அதே நிலைப்பாட்டில்தான் சம்பந்தரும் உள்ளார் என்பது தெளிவாகின்றது. இனியும் இவர்கள் மூடிமறைத்துக்கொண்டு ஏமாற்ற முடியாது. இனி செயலில் காட்டவேண்டிய கால கட்டம். ராஜபக்ச காலத்தில் மூடிமறைக்கலாம் இப்போது மூடிமறைக்க முடியாது.

எழுகதமிழில் கலந்துகொண்டவர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் என நாம் சொல்லித்திரிவதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் எழுகதமிழில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் எமது ஆதரவாளர்கள் எனக் கூறியிருக்கவில்லை. மாறாக எழுகதமிழ் தமிழரசுக் கட்சிக்கு எதிரானது. இது மக்கள் முன்னணியினுடையது என தமிழரசுக் கட்சிக்காறர்கள்தான் பிரச்சாரம் செய்தார்கள்.

தேர்தலில் தோற்றுப்போன தரப்பு 15 ஆயிரம் வாக்கு மாத்திரம்தான் விழுந்தது. சுமந்திரனுக்க விழுந்த வாக்குகளில் கால்வாசிதான் உவைக்கு விழுந்தது என்று சொல்வதை விட்டுவிட்டு நாங்கள் சொல்கின்ற அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்களிற்கு பதில்சொல்லப் பருங்கள்.
எங்களோடு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சுமந்திரனுடன் பல தடவை கேட்டபோது அவர் நழுவிச் செல்கிறார். இன்று படையணி ஒன்றுடன் சுற்றித்திரியும் அவர் மக்கள் மத்தியில் வரப் பயப்டபடுகின்றார் எம்முன் விவாதத்திற்கு வர அவர் விரும்பாவிடினும் மக்கள் மத்தியில் முகம் கொடுக்கக்கூட அவர் தற்போது தயங்கிவருகின்றார். வாக்களித்த மக்களிற்கே முகங்கொடுக்கமுடியாத நிலை அவர்களிற்கு இருக்கிறது. சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருக்கிறது என்றால் சம்பந்தன் எங்களோடு பகிரங்க விவாதத்திற்கு வரட்டும் அவரால் பதில் தர முடியுமா எனப் பார்ப்போம்.

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களிற்கு துரோகமிழைப்பதாக நாம் கூறிவருவதால் அதனால்தான் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் வந்திருப்பதாக அதனுடன் எம்மை இணைத்துப் பேசுகின்றார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசியல் ரீதியாக இவர்கள் துரோகம் இழைத்தாலும் சுமந்திரனையே ஏனையவர்களையோ கொல்லவேண்டிய தேவை எமக்கு இல்லை. ஆனால் சுமந்திரனது கொலை அச்சுறுத்தல் என்பது ஒரு நாடகம் என அவரது கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் சுமந்திரனை வன்னிஎல்லாம் கூட்டிக்கொண்டுதிரியும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் கூறியிருக்கிறார்கள். சம்பந்தன் சந்திரிக்காவினது காலத்தில் இருந்து குண்டுதுளைக்காத காரில் திரிகிறார். அவர் மக்களிடம் செல்லாமல் தன்னைப் பாதுகாத்துவருகின்றார். ஆனால் சுமந்திரன் மக்களிடம் செல்லாமல் தன்னைப் பாதுகாப்பதற்காகத்தான் இந் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்றார் அவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com