இறுதி யுத்தத்தின்போது தமது அங்கங்களை இழந்த மற்றும் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்பு மற்றும் கழுத்திற்குக் கீழ் இயங்கமுடியாத நிலையில் இருக்கும் உறவுகளுக்கு உதவும் பொருட்டு புலம்பெயர் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களால் அவர்களுக்கான வதிவிடமும், தொழில்நுட்ப பயிற்சி நிலையமும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இல்லமானது வவுனியா மாவட்டத்திலுள்ள கூமாங்குளப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் திகதி இவ்வில்லம் திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வு ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.