முதியவர் மீது பொல்லினால் தாக்குதல்

தனிப்பட்ட பிரச்சிணை காரணமாக வயது முதிர்ந்த பெரியவர் மீது அதே பகுதியினை சேர்ந்த இருவர் கொட்டண் பொல்லினால் தாக்கியதில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம்(07) மதியம் 2:30 மணியளவில் இச் சம்பவம் மாசியன்சந்தி நீர்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தம்பையா தர்மலிங்கம் வயது(73) என்ற முதியவரே காயங்களுக்கு உள்ளானவர் ஆவார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com