முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் நடக்கவிருக்கும் சர்வதேச திரைப்பட விழா

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கைலாசபதி கலையரங்கில்; ஆரம்பிக்கப்படவிருக்கிறது. இதனைத் தொடாந்து 16 செப்டெம்பர் முதல் 21 செப்டெம்பர் 2015 வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இலங்கை> இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் சுமார் 50 வரையிலான கதைப்படங்கள்> ஆவணப்படங்கள் மற்றும் குறுந் திரைப்படங்கள் என்பன காட்சிப்படுத்தப்படும். இந்த விழா நிகழ்ச்சிகளை சர்வதேச நாடுகளின்;; திரைப்படத்துறையைச் சார்ந்த ஏழு கலை ஆளுமைகள் தொடக்கி வைக்கவிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து வட மாகாணசபை முதல்வர் சீ.விக்கினேஸ்வரன் விழாவின் ஆரம்ப உரையை நிகழ்த்தவிருக்கிறார்.
தொடர்ந்து இசைஞர் காயத்ரீ ஹேமதாஸ> இசைச் சமர்ப்பணம் என்ற இசை நிகழ்ச்சியை> அவரது தந்தையாரான இசைச் சக்கரவர்த்தி பிரேமசிறி ஹேமதாஸவை நினைவுகூரல் நிகழ்வாக நடாத்தவிருக்கிறார்.
இசை கலைஞர் பிரேமசிறி ஹேமதாஸ> தனது ஆரம்பகாலத்தை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இசைக்கலைஞராகத் தொடங்கி பின்னர் இலங்கையிலும் பிறநாடுகளிலும் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்களுக்கான இசை அமைப்பாளராகவும்> பொது மேடைக் கலைஞராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். சிங்கள நாட்டுப்பாடல்களின் தனித்துவத்தைப் பேணி கிராமியக் கலைவளர்ப்பில் பெரும்பங்கினை வகுத்தவர். இவர் வசந்தத்தில் ஒரு வானவில் என்ற தமிழ் படத்திற்கு இசைப்பங்களிப்பைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம் யூரோப்பியன் பனோரமாவின் ஆரம்ப திரைப்படமாக PHOENIX 98 (2014) என்ற  ஜேர்மனிய திரைப்படம் திரையிடப்படுகிறது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com