சற்று முன்
Home / செய்திகள் / முதல் நாளிலேயே 14 இலட்சத்து 16 ஆயிரத்து 825 ரூபாவை உணவாக முழுங்கிய கொழும்பு மாநகரசபை !!

முதல் நாளிலேயே 14 இலட்சத்து 16 ஆயிரத்து 825 ரூபாவை உணவாக முழுங்கிய கொழும்பு மாநகரசபை !!

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச் சபை நிகழ்வுக்கான உணவுக்கு 14 இலட்சத்து 16 ஆயிரத்து 825 ரூபா செலவிடப்பட்டள்ளமை அம்பலமாகியுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச் சபை நிகழ்வு கடந்த 05.04.2018 புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

அதன்போது காலை நேர உணவுக்காக ரூபா ஒரு இலட்சத்து 55ஆயிரத்து 25 ரூபா ரசல்ஸ் (பிவிடி) நிறுவனத்திற்கும்,
பகல் உணவுக்காக ரூபா 9 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா ஜிஹான்ஸ் விவிஐபி இன்டோர் அன்ட் அவுட்டோர் கெட்டரிங் சர்வீஸ் நிறுவனத்திற்கும்,
மாலை சிற்றுண்டிக்காக ரூபா ஒரு இலட்சத்து 21ஆயிரத்து 800 ரூபா அலும்கா கெட்டர்ஸ் நிறுவனத்திற்கும்,
இரவு உணவுக்காக ரூபா ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஜிஹான்ஸ் விவிஐபி இன்டோர் அன்ட் அவுட்டோர் கெட்டரிங் சர்வீஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச் சபை நிகழ்வு உணவுச் செலவாக 14 இலட்சத்து 16 ஆயிரத்து 825 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொகையானது கொழும்பு மாநகர சபையில் அங்கத்துவம் வகிக்கும் 119 உறுப்பினர்களின் ஒரு மாதக் கொடுப்பனவின் கிட்டத்தட்ட 35% ஆகும்.

119 உறுப்பினர்களை அங்கத்துவப்படுத்தும் கொழும்பு மாநகர சபையில் காலை உணவு 500 பேருக்கும், மதிய உணவு 500 பேருக்கும், மாலை சிற்றுண்டி 400 பேருக்கும் இரவு உணவு 250 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமல்லாமல் மதிய உணவுக்காக ஐந்து இடங்களில் விலைமனுக்கள் கோரப்பட்ட நிலைமையில் மூன்று விலைமனுக்களின் பிரதிகள் மாத்திரமே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஜிஹான்ஸ் விவிஐபி இன்டோர் அன்ட் அவுட்டோர் கெட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தின் ஊடாக மதிய போசனத்திற்கு (ரூபா 1980.00 அடிப்படையில்) அனுமதி வழங்கப்பட்ட விலைமனுக்கோரலின் பிரதி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியறிக்கையில் இணைக்கப்படவில்லை.

இதேவேளை பொதுமக்களின் வரிப்பணம் இவ்வாறு வீண்விரயமாக்கப்படுவது தொடர்பில் தனது கருத்தை இன்றைய தினம் சபையில் தான் பதிவு செய்திருந்தாக கொழும்பு மாநகரசபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரான திருமதி உமாச்சந்திரா பிரகாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் முதலாவது சபை அமர்வு மங்கள சபை என்ற ரீதியில் உறுப்பினர்கள் தவிர்ந்த விருந்தினரும் வருகை தந்திருந்தமையால் இவ்வளவு செலவு ஏற்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் அது தொடர்பில் மாநகரசபையில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com