முதலமைச்சர் வருகையின்மை – தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படும் நியதிச் சட்டங்கள்

வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்விலும் வடக்கு மாகாண முதலமைச்சர் கலந்துகொள்ளாத சூழ்நிலையில் சபையில் வாசிப்பிற்கு எடுத்துக்கொள்ளமுடியாத  நான்கு நியதிச்சட்டங்கள் அடுத்த அமர்வு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக நோயுற்றநிலையில் கொழும்பில் தங்கியிருந்த முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடந்மத வாரம் யாழ்ப்பாணம் வருகைதந்திருந்தார் எனினும் நேற்று முன்தினம் மீண்டும் சிகிச்சைக்காக கொழும்பிற்குச் சென்றுவிட்டநிலையில் அவரது வருகையின்றி நான்கு நியதிச் சட்டங்கள் வாசிப்பிற்கு உட்படுத்தப்படாத நிலையில் இன்றைய (30) அமர்வின்போது  ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறித்த நியதிச்சட்டங்களை முதலமைச்சருக்குப் பதிலாக வாசிப்பதற்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிற்கு முதலமைச்சர் அனுமதி வழங்கியிருந்த நிலையில் சபையில் விவசாய அமைச்சர் காணப்படாமையால் சபையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதோட விவசாய அமைச்சரையும் எதிர்க்கட்சியினர் கேள்விக்கு உட்படுத்தியிருந்தனர். இந்நிலையில் சபை அமர்வின் இறுதித் தருணத்தில் சபைக்கு வருகைகந்திருந்த விவசாய அமைச்சர் அவைத்தலைவர் இல்லாத சூழ்நிலையில் பிரதி அவைத்ததலைவர் தான் நியதிச் சட்டங்களைப் படிக்கவில்லை எனவும் தனக்கு கால அவகாசம் தரவேண்டும் என கேட்டுக்கொண்டதற்கும் இணங்கவே தன்னால் சபைக்கு வருகைதந்து நியதிச் சட்டங்களை வாசிக்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com