முடிவிற்கு வந்தது அம்பாறை மாவட்ட பட்டதாரிகளின் உண்ணாவிரதம்

இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக இரு வாரங்களாக அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்று புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது.

”அபிவிருத்தி அலுவலகர் உட்பட பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் பட்டதாரிகளுக்கு அந்த நியமனங்கள் வழங்கப்பட வேண்டும், மாகாண வேலை வாய்ப்புகளில் கடைப்பிடிக்கப்படும் இன விகிதாசார சமப்படுத்தல் முறை கைவிடப்பட வேண்டும், 2015க்கு முன்னதாக பட்டம்பெற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வழங்கப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்து அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகள் இந்த உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று புதன்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்கும் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. மாகாண, கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி, மாகாண துணை அவைத் தலைவர் பிரசன்னா இந்திரகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடிஸ்வரன், மாகாண தலைமை செயலாளர் டி.எம்.சரத் அபேவர்தன உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் அதிகாரிகளும் அதில் கலந்து கொண்டார்கள்.
இந்த சந்திப்பில் முதலமைச்சர் உட்பட உரிய தரப்பினரால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளையடுத்தே இந்தப் போராட்டத்தை கைவிட தாம் முடிவு செய்ததாக அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ் பட்டதாரிகளின் சங்கத்தின் தலைவரான எம். திலீபன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds