முகாம் இருந்த காணியை பெற்றுத் தருமாறு முழங்காவில் பாடசாலை சமூகம் கோரிக்கை.

முழங்காவில்  மகா வித்தியாலயத்திற்கு அருகில் இருந்து அகற்றப்பட்ட இராணுவ முகாம் பகுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கும் விடுதிகளுக்குள் அருகில் இருந்த இராணுவ முகாமில் இருந்த இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து விடுதி கதவுகளை தட்டினார்கள் என கடந்த 18ம் திகதி சுரேஷ் பிரேமசந்திரன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த இராணுவ முகாம் அமைந்திருந்த சுமன் பண்ணை  எனும் பகுதியை விட்டு இராணுவத்தினர் வெளியேறி இருந்தனர்.
அப்பகுதிகளை இன்றைய தினம் சுரேஷ் பிரேமசந்திரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாடசாலை சமூகத்துடன் கலந்துரையாடலை நிகழ்த்தி இருந்தார்.
அதன் போது பாடசாலை சமூகம் பாடசாலைக்கு அருகிலையே குறித்த காணி அமைந்துள்ளமையால் அதனை பாடசாலைக்கே  பெற்று தருமாறு சுரேஷ் பிரேமசந்திரனிடம் பாடசாலை சமூகத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com