மீள்குடியேற்ற விசேட செயலணியில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு இடமில்லை – பிரதமர் ரணில்

Ranilமீள் குடியேற்றம் தொடர்பான விசேட செயலணியில் வட மாகாண முதலமைச்சர் இணைத்துக்கொள்ளப்படமாட்டார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வன்னி மாவட்ட எம். பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் இது தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர் வட மாகாண பிரதம செயலாளர் உட்பட மத்திய அரசின் அமைச்சுகள் மூன்றினது செயலாளர்களும் மேற்படி செயலணியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று பிரதமரின் பதிலைப் பெற்றுக் கொள்வதற்கான கேள்வி நேரத்தின் போது வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பியான சார்ள்ஸ் நி்ர்மலநாதன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்தபோதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாண முதலமைச்சரை மீள்குடியேற்றம் தொடர்பான விசேட செயலணியில் இணைத்துக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com