மீள்குடியேற்ற செயலணியில் ரிஷாட் பதியுதீன் இடம்பெற்றுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது – சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

Charlshஅரசினால் அமைக்கப்பட்டுள்ள மீள் குடியேற்றம் தொடர்பான விசேட செயலணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் போல் செயற்பட்டவரும் பல குற்றச்சாட்டுக்களுக்கு உட்பட்டுள்ளவருமான ரிஷாட் பதியுதீன் இடம்பெற்றுள்ளமை  வடக்கு மக்களுக்கு பெரும் சந்தேகத்தையும் விரக்தியையும் தோற்றுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்  இந்த நிலை பிரிவினைவாதமாக மாறக்கூடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீள் குடியேற்றம் தொடர்பான விசேட செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரை இணைத்துக்கொள்வது தொடர்பில் (11) கேள்வி நேரத்தின் போது பிரதமரிடம் கேள்விஎழுப்பும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. இது தொடர்பில் பிரதமரிடம் கேள்வியெழுப்புகையில், மீள் குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மூவர் இடம்பெறுகின்றனர். அவர்களோடு இச் செயலணியில் நான்காவதாக வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியுமா என வினவினார்.

மேற்படி செயலணியில் வட மாகாண முதலமைச்சர் இடம்பெறாமை வட பகுதி மக்கள் மத்தியில் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பில் வட மாகாண சபையில் அண்மையில் யோசனை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக செயற்பாடுகள் முன்னெடுக்கும் போது அது வட மாகாண சபையின் பங்கேற்போடு இடம்பெறுவது முக்கியம் அந்த வகையில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் அந்த செயலணியில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அது தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் கடந்த மஹிந்த ராஜபக்ஷ காலம் போல் செயற்பட விரும்பினால் செயற்படுங்கள் பரவாயில்லை என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com