மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் பாரிய ஆர்ப்பாட்டம் – கூட்டமைப்புடன் ஈ.பி.டி.பி இணைந்து பங்கேற்பு

13512081_1363302917018395_8712345318717391149_n
உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வலி. வடக்கின் மயிலிட்டி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் துரித மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை(27) யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.

15.06.1990ம் ஆண்டில் இருந்து இடம்பெயர்ந்துள்ள குறித்த மக்களின் இன்னல்களை நேரில் கண்டறிந்த ஐனாதிபதி, “06 மாதங்களுக்குள் உங்களை மீளக்குடியேற்றுவேன்..” என வாக்குறுதியளித்த நிலையில், அது இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 08 அம்ச கோரிக்கைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

முற்பகல்-10 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் கற்பூரம் கொளுத்தித் தேங்காய் அடித்து வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணி நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தைச் சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து வலி. வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரின் பிரதிகள் வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர் மற்றும் மனித உரிமைகள் காரியாலத்திலும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திலும் கையளிக்கப்பட்டன.13502115_1185451121499146_3973706275089423376_n13529135_1185451214832470_4673419715420905825_n

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ” உண்மையில் எத்தனை ஏக்கர் காணி இராணுவம் வைத்துள்ளது என்பது அரசாங்கத்துக்குத் தெரியுமா? ” ” இன்னும் எமக்கு முகாம் வாழ்க்கையா” “மீள் குடியேற்றப்படும் வரை நிவாரணத்தைத் தா” உள்ளிட்ட பல்வேறு பதாதைகளைத் தாங்கியிருந்ததுடன் பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.

இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஐா, சிறிதரன், சரவணவன் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா, கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும் மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) மற்றும் கட்சியின் பிரதேச நிர்வாக செயலாளர்களும் சிவில் சமூக அமைப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.13494957_1185451178165807_2008253429665574139_n

01-5-1024x614 3-10-1024x614 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com