மீள்குடியேற்றத்தை பூரணப்படுத்திய பின்னர் பொங்கல் விழாவை நடாத்துங்கள்.

முகாம்களில் வாழும் அனைத்து மக்களையும் மீள் குடியேற்றிய பின்னரே பொங்கல் விழாவை வலி.வடக்கில் நடத்த வேண்டும் என வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ். சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் , 
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசாங்கம் வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிப்பதாக கூறி விடுவித்து இருந்தனர்.
அதன் பின்னர் அடுத்த கட்டமாக தற்போது வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பிரதேசங்களில் 701.5 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பதாக கூறி இருந்த போதிலும் 690 ஏக்கர் நிலப்பரப்பினையே  விடுவித்து உள்ளனர்.
இன்னமும் வலி.வடக்கு பிரதேசத்தில் சுமார் 5 ஆயிரத்து 500 ஏக்கர் நிலபரப்பும் வலி.கிழக்கு பிரதேசத்தில் 210 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்க பப்ட வேண்டும்.
இதுவரை விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எவையும் முகாம்களில் வாழும் மக்களின் காணிகள் அல்ல. 38 முகாம்களில் வாழுகின்ற மக்களின் காணிகளில் எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
முகாம்களில் வாழும் மக்களின் காணிகளை விடுவித்த பின்னர் பொங்கல் விழாவை நடத்தலாம். ஜனாதிபதி கூறியது போல ஆறு மாத கால பகுதிக்குள் முகாம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com