மீரியபெத்தை வீடுகள் கையளிப்பு..

நாட்டு மக்களை மட்டுமன்றி உலக பார்வையையும் ஈர்த்து கண்ணீர் மழ்க வைத்த மீரியபெத்தை மண்சரிவு 2014.10.29 அன்று இடம்பெற்றது.

பல உயிர்களை காவுக்கொண்ட இந்த மண்சரிவில் தத்தமது வீடு வாசல்களை இழந்து தற்காலிக குடிமனைகளிலும் அனர்த்த இடர்பாடு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்த இந்த மக்களுக்கு 22.10.2016 அன்று விடிவு கிடைத்துள்ளது.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கான தனி வீடுகள் நீண்ட காலத்தின் பின் 22.10.2016 அன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது பயனாளிகளுக்கு 75 தனி வீடுகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இவ் வைபவம் 22.10.2016 அன்று கொஸ்லந்தை மக்கள்தெனிய பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், ஊவா மாகாண ஆளுநர் ஜெயசிங்க, பதுளை மாவட்ட செயலாளர் நிமல் அபயஸ்ரீ, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், ஏ.அரவிந்தகுமார், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள், இராணுவத்தினர் உள்ளிட்ட பல அமைச்சு முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.340a0062 img_3093 img_3111 img_3143 img_3145 photo-1 photo-2 vlcsnap-2016-10-22-20h06m14s1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com