மீரியபெத்தை மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்ட போதிலும் அவை பூரணத்துவமின்றி காணப்படுவதாக மக்கள் விசனம்

img_8686கொஸ்லாந்தை மீறியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு சுமார் 23 மாதங்களுக்கும் அதிகமான காலம் அகதி முகாம்களில் காலத்தை கடத்திய மக்களிற்கு கடந்த 22ம் திகதி வீடுகள் வழங்கப்பட்ட போதிலும் அவை பூரணத்துவமின்றி காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களின் தொடர்ச்சியான வேண்டுகோளிற்கு இணங்க கடந்த 22ம் திகதி பூனாகலை மக்கள்தெனிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், அவற்றில் தொடர்ந்தும் குறைபாடுகள் நிலவுவதாக அங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, கொஸ்லாந்தை பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதிய வீடுகள் ஒழுகுவதாகவும், சீரான முறையில் நீர் வழிந்தோடாததால் மண்ணரிப்பு ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு மண்ணரிப்பு காரணமாக கழிவறை குழிகளுக்கு போடப்பட்டுள்ள சிலிண்டர்கள் தோற்றம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கும் மக்கள், நிலம் தாழிரங்கும் அபாய நிலையையும் தாம் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மண்சரிவினால் தமது உறவுகளையும் உடைமைகளையும் இழந்த நிலையில் இரண்டு வருடங்களாக முகாம்களில் சொல்லண்ணா துயரங்களை அனுபவித்து பல போராட்டங்கள், தொடர்ச்சியான கோரிக்கைகளையடுத்து தமக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் வாழ்வதற்கே மக்கள் இன்று அச்சப்படுகின்றனர்.

மண்சரிவால் பாதிக்கப்பட்டு சுமார் 02 வருடத்திற்கு பிறகு தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள வீட்டின் நிலையை என்னி கவலையடையும் மக்கள், குறித்த குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்து தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
photo-2 vlcsnap-2016-10-22-20h01m50s179

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com