மீனவர் மீதான துப்பாக்கிச் சூடு – கடற்படைக்கு தொடர்பில்லை – இலங்கை அரசாங்கம் மறுப்பு

இந்திய மீனவர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றுமொருவர் காயத்திற்குள்ளாகிய சம்பவம் தொடர்பில் இலங்கை அரசு தனது கவனத்தை செலுத்தியுள்ளதாக உள்விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பு முக்கியமானது எனவும், இந்திய மீனவர்களும் மனிதர்களே எனும் அடிப்படையிலேயெ இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து அரச நிறுவனங்களும் சகல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் தொடர்பில் சிறப்பாக நடந்துள்ளனர் எனவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து, இலங்கை கடற்படையினருக்கும் குறித்த சம்பவத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென தாம் அறிவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயினும், அவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்குமாயின், அது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில், இந்திய அதிகாரிகளின் உதவிகளையும் நாடவுள்ளதாகத் அமைச்சு அறிவித்துள்ளதோடு, இது தொடர்பில் GPS தொழில்நுட்ப உதவியையும் பெறவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com