மீனவர் பிரச்சினை – இலங்கை மீனவர்கள் ஜெ வுடன் பேச்சு நடத்த ஏற்பாடு

இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு இலங்கை இந்திய மீனவர் நலன்புரி அமைப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாக அந்த அமைப்பின் ஆலோசகர் அந்தோனிமுத்து அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மூன்று கட்டப் பேச்சுக்கள் நடைபெற்றிருக்கின்றன. நாலாம் கட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை இந்திய அரச தலைவர்கள் மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் பின்னணியிலேயே இலங்கை இந்திய மீனவர் பிரதிநிதகளுக்கிடையிலான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக தமிழக முதல்வரைச் சந்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று அந்தோனிமுத்து அவர்கள் கூறுகின்றார்.
இது தொடர்பாக வடபகுதி மீனவர்கள் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சரைச் சந்தித்து அண்மையில் பேச்சுக்கள் நடத்தியபோது, தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசுவதில் தனக்கு ஆட்சேபணை இல்லையென தெரிவித்திருப்பதையடுத்து, இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தமிழக முதல்வரைச் சந்திப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அந்தோனிமுத்து தெரிவித்தார்.
இதேவேளை, எல்லை தாண்டி இலங்கைக் கடற்பரப்பினுள்ளே வருகின்ற இந்திய மீனவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்திருக்கின்றார்.
வரும் 22ஆம் திகதி வடபகுதி மீனவர் பிரதிதிநிதிகளுக்கும் அமைச்சருக்கும் இடையில் நடைபெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்கக்ப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com