மீனவர் உயிரிழப்பு

புங்குடுதீவு வேலணை பாலத்தின் கீழ் வீச்சு வலை தொழிலில் ஈடுபட்ட மீனவர் உயிரிழந்துள்ளார். மயங்கி வீழந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று (12) மதியம் 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். தம்பாட்டி ஊர்காவற்துறை பிரதேசத்தினை சேர்ந்த முத்தையா கணகசபை வயது(69) என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் என தெரிவிக்கப்பட்டது. உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் பாரப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com