சற்று முன்
Home / செய்திகள் / மீண்டும் வேலைநிறுத்தத்தில் குதிக்க தயாராகும் மருத்துவர்கள்!

மீண்டும் வேலைநிறுத்தத்தில் குதிக்க தயாராகும் மருத்துவர்கள்!

சம்பள பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் புதன்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

சம்பள முரண்பாடுகள் குறித்து புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு இந்த பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வை வழங்காவிட்டால் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்கவுள்ளதாக GMOA, வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளப்பிரச்சனைகளை ஆராய கடந்த வாரம் நியமிக்கப்பட்ட துணைக்குழுவில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, வஜிர அபேவர்தன, ரஜித சேனரத்ன, இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க ஆகியோர் உள்ளனர்.

தேசிய சம்பள கட்டமைப்பை மீறி சம்பள திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததிலிருந்து இரண்டு ஆண்டுகளாக சம்பள பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீடிப்பதாக GMOA குறிப்பிடுகிறது.

அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் சம்பள மறுஆய்வு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு பிரச்சினையை மேலும் சிக்கலாக்க முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

அனைத்து துறைகளுக்கும் நியாயமாக இடைக்கால கொடுப்பனவை வழங்க வேண்டுமென GMOA வலியுறுத்தியுள்ளது.

மேலும், நோயாளிகள் மற்றும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு தமது வேலைநிறுத்தத்தை இதுவரை ஒத்தி வைத்ததாகவும், உடனடி தீர்வில்லையெனில் வரும் புதன் கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com