மீண்டும் வெடிக்கும் – மாவை எம்.பி

mavai_senathirajahமீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக இலங்கை அரசிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா.

மக்களது காணிகள் விடுவிக்கப்படாது தொடர்ந்தும் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்திலேயே, மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவரும் நிலையில், மீண்டும் காணி அளவீடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் மே மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிட்ட அவர், எதிர்வரும் மாதமளவில் தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாவிட்டால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds