மீண்டும் வாய் மூடி மௌனித்தார் சம்பந்தர் !

SAMSUNG CAMERA PICTURES

யாழ் பொது நூலகத்தில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் வடமாகாண முதலமைச்சரையும் தனித்தனியாக பான் கீ மூன் சந்தித்து பேசியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அந்த கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதன்போது பான் கீ மூனின் கவனத்தினை ஈர்ப்பதற்கான யாழ் பொதுசன நூலகத்திற்கு முன்னால் திரண்டிருந்த காணாமல் போனவர்களது உறவினர்கள் பான் கீ மூனைச் சந்தித்த தங்கள் அரசியற் பிரதிநிதிகள் ஏதேனும் உறுதிமொழி பெற்று வந்து தம்மிடம் சொல்லிச் செல்வார்கள் என நெடுநேரமாகக் காத்திருந்தனர்.

அதன்போது மக்களை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சித்தார்த்தன் மற்றும் சுரேஸ்பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் மக்களை நேக்கிவந்தபோது அவர்களை நெருங்கிய மக்கள் அவர்களிடம் கேள்விகளைத் தொடுத்தவண்ணமிருந்தனர்.

இதனால் ஆத்திரமைடைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுமந்திரனை அங்கு நிற்கப்பணித்துவிட்டு ஏதும் கூறாமல் நூலகத்திற்குள் சென்றார். இதனால் ஆத்திரமைந்த மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராகவும் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராகவும் கோசங்களை ஏழுப்பியவாறிருந்தனர்.

எனினும் பான் கீ மூனுடனான தனது சந்திப்பினை முடித்துக்கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மக்களை நோக்கிவந்போது ஊடகவியலாளர்கள் அவரைச் சூழந்துகொண்டனர். அதன்போது தான் பான்கீ மூனிடம் கதைத்தவற்றை மக்களிடம் பகிரப்போவதாகக்கூறிய வடக்கு முதல்வர் மக்களிடம் சென்று உரையாடினார். மக்கள் அவரை நோக்கி பல்வேறு கேள்விகளைத் தொடுத்தபோதும் அவர் அவற்றிற்கு பதிலளித்துச் சென்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com