மீண்டும் பொங்குதமிழ் – புரட்டாதி 09 யாழில் அணிதிரள தமிழ் அமைப்புக்கள் அறைகூவல்

IMG_2501வடக்கு கிழக்கு மாகாணங்களை பொத்த சிங்கள மயமாக்கி நில ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவந்து ஒரு கலாச்சார அழிப்பை மேற்கொள்வதற்கான முழு நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கு தழுவய மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ள தமிழ் அமைப்புக்கள் விடுதலைப் புலிகளின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொங்குதமிழ் போராட்டத்திற்கு நிகரான வகையில் அரச இயந்திரம் முற்றாக முடங்கும் வகையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கப்பொவதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

அதன் முதற்கட்டமாக எதிர்வரும் புரட்டாதி மாதம் 09 ஆம் திகதி யாழ் நகரில் மிகப்பெருமெடுப்பிலா எதிர்ப்புப் பேரணி ஒன்றினை முன்னெடுக்கப்போவதாக தமிழ் அமைப்புக்கள் தமது போராட்டத்திற்கு அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் பல்கலைக்கழக சமூகம் என 54 இற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் உடனடி ஆதரவினை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதோடு இப்போராட்டத்தில் பங்கேற்க மக்களை அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளன.
யாழ்.பொது சன நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (14.08.2016) ஒன்று கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகியவையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளிட்டவற்றுடன் யாழ்.பல்லைக்கழகத்தின் அனைத்து அமைப்புக்களும் குடாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள், கிராமிய அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள் என 54 இற்கும் மேற்பட்ட  அமைப்புக்கள் என்பவை இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்டையில் இப்போராட்டங்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் ஊடகங்களிற்குக் கருத்துத் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் இப்போராட்டங்களை மாவட்டங்கள் தோறும் விஸ்தரிக்கப்போவதாகவும்
கடந்த காலங்களில் பரவலாக மக்கள் போராட்டங்கள் பல சந்தர்ப்பங்களினிலும் மேற்கொள்ளப்பட்டபொது அவற்றை பொருட்படுத்தாது போன்று இம்முறை அரசு கண்டு கொள்ளாது தான் நினைப்பதை தான் முன்னெடுக்குமானால் வடக்கின் அரச இயந்திரத்தை முழுமையாக முடக்கும் வகையிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்திருந்தார்.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

 

 

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

IMG_2462

IMG_2475

IMG_2498

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com