சற்று முன்
Home / செய்திகள் / மீண்டும் சூடு பிடிக்கும் விக்னேஸ்வரன் கூட்டணி..

மீண்டும் சூடு பிடிக்கும் விக்னேஸ்வரன் கூட்டணி..

வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின், அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் மீண்டும் சூடு பிடித்துள்ளன.

விரைவில் விக்னேஸ்வரன் அணி, ஒரு கூட்டணியாக கையொப்பிட்டு இயங்கவுள்ளது.

இதற்கு முன்னோடியாக கூட்டணியில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஏழு பேரை கொண்ட இந்த குழு, கூட்டணியின் ஒப்பந்த வரைபு, மற்றும் கொள்கை பிரகடனம் உள்ளிட்ட தயாரிப்புக்களை மேற்கொள்ளும்.

இந்த குழுவில் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகியவற்றின் சார்பில் தலா 2 பேரும், அனந்தி சசிதரனின் கட்சி சார்பில் ஒருவருமாக- 7 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com