சற்று முன்
Home / செய்திகள் / மீண்டும் ஊடகப் பேச்சாளராக ஹெகலிய ரம்புக்வெல !!

மீண்டும் ஊடகப் பேச்சாளராக ஹெகலிய ரம்புக்வெல !!

புதிய அரசாங்கத்தின் பேச்சாளர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான, ​மஹிந்த சமரசிங்ஹ மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகிய இருவ​ரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கூட்டரசில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெளியேறிய நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அரசாங்கத்தின் பேச்சாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான, ​மஹிந்த சமரசிங்ஹ மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகிய இருவ​ரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக முன்னர் பதவிவகித்த காலத்திலும் கெஹலிய ரம்புக்வெலவே அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெகலிய ரம்புக்வெல ஊடக அமைச்சராகவும் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளராகவும் இருந்தபோதே ஊடகங்களுக்கு எதிராக நெருக்கடிகள் பிறப்பிக்கப்பட்டதோடு ஊடகப் படுகொலைகளும் அரங்கேறியிருந்தன. அக்காலப்பகுதியிலேயே இலங்கையில் செயற்பட்ட மற்றும் புலம்பெயர் ஊடகங்கள் பல இலங்கை அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருந்தன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com