சற்று முன்
Home / செய்திகள் / மீட்புப் பணிகளில் இந்தியக் கடற்படை

மீட்புப் பணிகளில் இந்தியக் கடற்படை

இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்பு மற்றும் மருத்துவ உதவிப் பணிகளில் இந்தியக் கடற்படையும் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் 14 மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபடுவதற்காக இந்தியக் கடற்படைக் குழுக்கள் இலங்கைவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஐஎன்எஸ் கிர்ச் என்ற இந்தியக் கடற்படைக் கப்பல் உதவிப் பொருட்கள் மற்றும் முதலாவது மீட்பு மற்றும் உதவிக் குழுக்களுடன் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பலில் வந்த இந்தியக் கடற்படையின் மீட்புக் குழுக்கள், காமினி வகை மிதவைப் படகுகளுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அங்கு மீட்புப் பணிகளில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து இந்திய கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இந்திய கடற்படை மருத்துவக் குழுக்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த ஆரம்பித்துள்ளன.

மேலும், மீட்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்களுடன் இரண்டு இந்தியக் கடற்படைக் கப்பல்கள் நாளை கொழும்பு வரவுள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com