மியான்மாரிலும் நில அதிர்வு – இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், பிஹார் மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.

myanmar earthquakeஇத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தநிலையில் மியான்மர் நாட்டின் மத்திய பகுதியிலும்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான நில அதிர்வுகள் தொலைவில் உள்ள நாடுகளிலும் உணரப்பட்டது.

இது மத்திய மியான்மர் நகரமான மெய்க்டிலாவுக்கு மேற்கே 143 கிமீ தொலைவில் இதன் மையம் இருந்ததாக யு.எஸ்.ஜி.எஸ் தெரிவித்துள்ளது.

மியான்மரின் பெரிய நகரமான யாங்கூனிலும் பிற நகரங்களிலும் கட்டிடங்கள் குலுங்கியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் அலுவலக கட்டிடங்கள் சில விநாடிகளுக்கு குலுங்கியது. மியான்மரின் மேற்கில் உள்ள வங்கதேசத்திலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்க அலைகளின் தாக்கத்தினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.

மியான்மர் நிலநடுக்க மையம் பண்டைய நகரம் பகனுக்கு மேற்கே 15 மைல்கள் தூரத்தில் சவுக் என்ற இடத்துக்கு மேற்காக இருந்தது. மேலும் பூமிக்கு அடியில் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மேலளவில் அதிக சேதங்களை ஏற்படுத்தாது என்று நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com