சற்று முன்
Home / உலகம் / மியான்மரில் மரகதக்கல் சுரங்கத்தில் 50 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மியான்மரில் மரகதக்கல் சுரங்கத்தில் 50 தொழிலாளர்கள் உயிரிழப்பு

வடக்கு மியான்மரில் மரகதக்கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 50 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக நாட்டின் அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.

கச்சின் மாநிலத்தின் ஹெபகாந்தேரியா நகரத்தில் உள்ள சுரங்கத்தில் மரகதக்கற்களை சேகரித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கனமழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டு சேற்று அலைக்குள் தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 9:40 மணிக்கு முப்பத்தைந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், பின்னர் மேலும் 15 சடலங்கள் காலை 10:00 மணிக்கு கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 பாதுகாப்பானவை

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுவரும் 26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளதாக ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com