மின் உற்பத்தி நிலையங்களுக்கு முப்படையின் பாதுகாப்பு

இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான சகல மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கிரீட் உப மின் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளை முப்படையினர் ஆரம்பித்துள்ளனர். 
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய 2016 மார்ச் மாதம் 16 ஆம் திகதி நேற்று காலை 0600 மணி தொடக்கம் பாதுகாப்பு வழங்கும் கடமைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பதில் பணிப்பாளருமான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கிரீட் உப மின் நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளைச் சேர்ந்த முப்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds