மின்சார செலவுகளை குறைக்க ஸ்மாட் மீற்றர்களை அறிமுகம் செய்ய நடவடிக்கை!

மின்சார உற்பத்தி செலவுகளை குறைக்கும் முகமாகவும் மின்சாரத்தினை சேமிக்கும் முகமாகவும் “ஸ்மார்ட் மீற்றர்” எனும் புதிய தொழிர்நுட்பத்தினை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(31) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போதய காலத்தில் தொழில்நுட்பம் வெகு விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது. உற்பத்தி, பயன்பாடு, பகிர்ந்தளிப்பு, ஆகியவற்றுக்காக உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதானது தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் நன்மை தரக்கூடியதொன்றாகும். அவ்வகையில் ஸ்மார் மீட்டர்களை பயன்பாட்டுக்கென  அறிமுகப்படுத்துவது மிகவும் அவசிய தேவைகளில் ஒன்று.

இதன்மூலம் மின்சார முகாமைத்துவத்துக்கான கேள்வி உண்டாகின்றது. இதன்மூலம் ஒவ்வொருவரும் தமது மின்சாரப் பயன்பாடு தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க முடியும். அண்மைக்காலங்களில் நமது நாட்டின் மின்சார உற்பத்தி துறையானது பாரிய அபிவிருத்தியை அடைந்துள்ளது. அத்துடன் நாம்  எமது மக்களுக்கு நாள் முழுவதும் 24 மணித்தியால 100 சதவீத மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் பிரதியமைச்சர் ​மேலும் தெரிவித்தார்.

மக்களது மின்பொருள் பாவனைக்கான நேரங்களை ஒதுக்கி அதனை அளவீடுசெய்வதற்கு இவ் ஸ்மார்ட மீற்றர் கருவி உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com