சற்று முன்
Home / செய்திகள் / மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி – கரவெட்டியில் சம்பவம்

மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி – கரவெட்டியில் சம்பவம்

கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (23) காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் டிஷ் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரீவி இணைப்பிலில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நகரில் தொலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் இவர்கள் இருவரும் 50, 29 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com