சற்று முன்
Home / செய்திகள் / மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி

வடமாகாண விளையாட்டு வீர ,வீராங்கனைகளை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவில் மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டியில் ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் மற்றும் பெண்களுக்கான வலைப்பாந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் வடமாகாண விளையாட்டு திணைக்களத்துடன் இணைந்து வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டிகள் மாவட்ட ரீதியில் இடம்பெறவுள்ளது.

வடமாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களே இப்போட்டியில் பங்கேற்க முடியும் என்பதுடன் ஒரு விளையாட்டு வீரர் ஒரு கழகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் ஆளுநர் செயலகம் மற்றும் வடமாகாண சபையின் இணையத்தளத்திலும் (https://np.gov.lk/) பெற்றுக்கொள்ளலாம். வெற்றிபெறும் கழகங்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன் பங்குபற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் கழங்கள் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை செப்டம்பர் மாதம் 09ஆம் திகதிக்கு முன்னர் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’ வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி , யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி இலக்கம் : 021 221 9375 , தொலைநகல் இலக்கம்: 021 221 9374 மற்றும் pronpgovernor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளமுடியும்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com