மாநகர முதல்வர் வேட்பாளர் – வித்தியாதரன் அவுட் ! ஆனொல்ட்டுக்கு வாய்ப்பு !!

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் நகர முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக இமானுவேல் ஆனொல்ட், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியைத் துறந்துள்ளாா்.
தனது பதவி விலகல் கடிதத்தை வடக்கு மாகாண சபை உறுப்பினா் இமானுவேல் ஆனொல்ட் கடந்த 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வழங்கிவிட்டார் என தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று(18) திங்கட்கிழமை ஆரம்பமாகி வரும் நிலையில் எதிா்வரும் வியாழக்கிழமை (21) நண்பகலுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ. ஆனொல்ட் அந்தப் பதவியிலிருந்து விலகி யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக தன்னை நியமிக்கக்கோரி ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ந.வித்தியாதரன் தமிழரசுக் கட்சிக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து வந்திருந்தார். எனினும் அவரது மைத்துனரான நாடாளுமன்ற உறுப்பினரின் கடும் எதிர்ப்பினால் வித்தியாதரனின் முயற்சி கைகூடவில்லை எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com