மாணவி கொலை வழக்கு – சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பம் யாழ்.மேல் நீதிமன்றால் நிராகரிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள ஒன்பது சந்தேக நபர்களினதும் , விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை அண்மிப்பதனால், மேலும் காலத்தை நீடிப்பு செய்வதற்காக குறித்த ஒன்பது சந்தேக நபர்களும் யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன் போது 4ம் சந்தேக நபரான மகாலிங்கம் சசீந்திரன் , 7ம் சந்தேக நபரான பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் 9ம் சந்தேக நபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சரத் வல்கமே மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.
ஏனை சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆயராகாத  நிலையில் சந்தேகநபர்கள் பிணை கோரி தாமே விண்ணப்பம் செய்ய நீதிபதி அனுமதித்தார்.

குறித்த சந்தேக நபர்களின் விண்ணப்பத்தை அடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கையில் ,

சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை அண்மித்து உள்ளதனால் , விளக்க மறியல் காலத்தை நீடிப்பதற்காக மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் முற்றுப்பெறாததால் மேலும் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டிய கடப்பாடு இருப்தனாலும் , விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டிய கடப்பாடு மேல் நீதிமன்றுக்கு உள்ளது.

அதனை கருத்தில் கொண்டு சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்படுகின்றது.. குறித்த ஒன்பது சந்தேக நபர்களையும் தொடர்ந்து மூன்று மாத கால பகுதிக்கு விளக்கமறியலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய மேல் நீதி மன்றம் அனுமதிக்கின்றது .

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 10ம் திகதி மீண்டும் இந்த மன்றில் இந்த ஒன்பது சந்தேக நபர்களையும் முன்னிலைப்படுத்த வேண்டும் என அனுராத புரம் சிறைச்சாலை அத்தியட்சகரை பணிக்கின்றது.
மேலும் ஒன்பது சந்தேக நபர்களின் பாதுகாப்பு மற்றும் நீதிமன்றத்தின் பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். மீண்டும் ஒரு கரும் புள்ளி நீதி துறைக்கு ஏற்பட அனுமதிக்க முடியாது. என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com