மாணவிக்கு துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சரிடம் பரிசு பெற்றுக்கொள்ள வந்தபோது தனது துவிச்சக்கர வண்டியை திருடர்களிடம் பறிகொடுத்த பாடசாலை மாணவிக்கு புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றை வடமாகாண சபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து நேற்று வழங்கி வைத்தார்.
நெல்லியடி நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் கரவெட்டி தெற்கு மேற்கு பிரதே சபை உள்ளுராட்சி வார நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பரிசில் பெற்ற சின்னதம்பி வித்தியாலய மாணவி முருகானந்தம் சியாமினி என்பவரின் துவிச்சக்கர வண்டியைத் திருடர்கள் களவாடிச் சென்றிருந்தனர்.
ஐந்து அங்கத்தவர்களை கொண்ட மாணவியின் குடும்பம் வறுமைக் கோட்டுக்கு உள்பட்டவர்கள். அந்த மாணவிக்கு புதிய துவிச்சக்கர வண்டியை வாங்கிக் கொடுக்கக் கூடியநிலையில் அந்த மாணவியின் குடும்பம் இல்லை என பாடசாலை அதிபர் மற்றும் கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலர், ஆகியோர் கோரிக்கைவிடுத்திருந்தனர்.
அதற்கமைய இந்த துவிச்சக்கர வண்டியை அந்த மாணவிக்கு மாகாண சபை உறுப்பினர் வழங்கி வைத்தார்.
இதேவேளை அண்மையில் ஊடகவியலாளர் ஒருவரின் துவிச்சக்கர வண்டியும் களவாடப்பட்டுள்ளது. அவருக்கான புதிய துவிச்சக்கர வண்டியினையும் வட மாகாணசபை உறுப்பினர் சிவக்கொழுந்து வழங்கி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com