மாணவிகள் துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைது – கல்வி அதிகாரிகள் அசமந்தம் –

IMG_6672யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும்  ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை (22) காலை முதல் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டநிலையில் துஸ்பிரயோக நடிவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆசிரியரைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். நாளையதினம் (23) அவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளாதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் மேலும் ஒரு ஆசிரியர் பாடசாலைக்கு வருகைதராது தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவதுருவதாக பொலிஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என  நேற்றைய தினம், வலய கல்வி பணிமனைக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்றயதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.IMG_6692

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் உள்ள ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் மாணவிகள் சிலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக அந்த பாடசாலையில் பணியாற்றும் மற்றுமொரு ஆசிரியராலும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களாலும் அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதிலும், அதிபர் இதனை மூடி மறைக்க முட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கல்விப் பணிப்பாளர்களும் நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பெற்றோர்களும் பாடசாலையின் மாணவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இப் பாடசாலையில் இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பெற்றார்
05 மாணவிகள் அப்பாடசாலை விஞ்ஞான ஆசிரியரால் கடந்த வாரம் பாடசாலையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் இதனை நேரில் கண்ட அப் பாடசாலை பெண் ஆசிரியர் ஒருவரினால் பாடசாலை அதிபர் திரு ரவிச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டபோது அவரால் இது தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்காது சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஏனைய ஆண் ஆசிரியர்களுடன் சேர்ந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதுடன் முறையிட்ட குறிக்கப்பட்ட பெண் ஆசிரியரை அவசர அவசரமாக கல்வித் திணைக்கள உதவியுடன் இடமாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

IMG_6695
மேலும் இது தொடர்பாக வலயக் கல்விப்பணிப்பாளருக்கு அறிவித்தும் அவரால் இது தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்காது சம்பந்தப்பட்ட ஆசிரியரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனை அறிந்த சமூகஆர்வலர், நலன்விரும்பிகள் இப்பிரச்சனை தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் பங்கேற்றிருந்து பழையமாணவர் ஒருவர் வாகீசத்துக்கு கருத்துத் தெரிவித்தபோது,

குறித்த சம்பவத்திற்கு முன்னரும் இவ்வாறான சில சம்பவங்கள் இங்கு நடைபெற்றதாகவும் அதுதொடர்பில் நேரில் பார்த்த மாணவன் ஒருவன் அதிபருடன் முரண்பட்டபோது அவனை பாடசாலையிலிருந்து இடைநிறுத்தியதாகவும் குறித்த மாணவனை மீண்டும் வலயக் கல்விப்பணிமனை அதிகாரிகள் அதிபருடன் சமரசம் செய்து மீண்டும் பாடசாலையில் இணைத்ததாகவும் தெரிவித்தார். IMG_6701

அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தவேளை அவ்விசாரணை நடவடி்கைகளைக் குழப்பும் நோக்கில் அப்பாடசாலை ஆசிரியர்கள் இருவர் பாதிக்கப்பட்ட மாணவிகள் வீட்டுக்குச் சென்று பிள்ளைகளையும் பெற்றோரையும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

நிலைமை கட்டுமீறிய நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை பாடசாலைக்கு வந்த வலயக் கல்விப்பணிப்பாளர் யாழ் மாவட்ட பொலிஸ் அதிகாரியிடம் நீங்கள் உங்கள் சட்டசடவடிக்கைகைளை மேற்கொள்ளுங்கள் நாங்கள் இதில் தலையிடமாட்டோம் என ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் உதவிக் கல்விப்பணிப்பாளர்களில் ஒருவருடன்  சிறிதுநேரம் உரையாடினோம். இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வலயம் விசாரித்துவருகின்றது. நாம் நடவடிக்கை எடுப்போம் பொலிஸ் அளவிற்குச் சென்று நிலைமையை பெரிசுபடுத்தியிருக்கத்தேவையில்லை என்பாக இருந்தது அவரது பதில்.

குற்றம் நிரூபணமாயின் உங்கள் நடிவடிக்கை என்னவாக இருக்கும் என அவரிடம் கேட்டபோது நீண்டமௌனமே அவரின் பதிலாக இருந்தது. இடமாற்றம் வழங்குவதைத்தாண்டி உங்களால் வேறுஏதும் அதிகபட்ச நடவடிகை உள்ளதா என கேட்டபோது மெல்லிய சிரிப்பொன்றைத்தவிர அவரிடம் அந்தக் கேள்விக்கு பதில் இல்லை.

பாலியல் துஷ்பிரயோக நடவடிகைகளில் ஈடுபடும் ஆசிரியர்களிற்கு இடமாற்றம்தான் அதி உச்ச தண்டனையாயின்……………………………………….?

IMG_6710

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com