மாணவிகளைத் துரத்தி துரத்தி வீடியோ எடுத்து சுன்னாகம் பொலிசார் அடாவடி

87135-police-03யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டுவிழா நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி வெள்ளிக்கிழமை (09) யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலையில் தென் ஆசியாவின் முதற் பெண்கள் பாடசாலையான வரலாற்றுப் புகழ்மிக்க உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளை சுன்னாகம் பொலிசார் துரத்தித் துரத்தி விடியோ எடுத்து மிரட்டியமை யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவங்கள் தொடர்பில் யாழ் வரும் ஜனாதிபதியிடம் தாம் முறையிட்டு நீதி கோரப்போவதாக உடுவில் மகளிர்கல்லூரி மாணவிகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை உடுவில் மகளிர் கல்லூரிப்பிரதேசத்தில் நடைபெற்ற இச் சம்பவங்கள் தொடர்பில் தெரியவருவதாவது,

அதிபர் மாற்றத்தால் போராட்டக் களமாக மாறியிருந்த உடுவில் மகளிர் கல்லூரி இன்றைய தினம் மீள ஆரம்பமாகியது. இந்நிலையில் பழைய அதிபருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் புதிய அதிபர் தலைமையில் அவருக்கு ஆதரவான ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடத்தினர்.

அதில் இருந்து வெளியேறிய மாணவிகள் தமது பெற்றோருடன் வீடு செல்ல முற்பட்டவேளை அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

அதனையும் மீறி பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்து செல்ல முற்பட்ட போது அந்த மாணவிகளை பொலிஸார் துரத்தி துரத்தி வீடியோ எடுத்தனர்.

அதனை பெற்றோர் தடுக்க முற்பட்ட போது அதனையும் மீறி வீடியோ எடுத்ததுடன் பெற்றோரை மிரட்டியதுடன் பெற்றோரையும் வீடியோ எடுத்தனர். வீதியால் சென்றவர்களையும் வீடியோ எடுத்தனர்.

அத்துடன் அங்கு நின்ற ஊடகவியலாளர்களை வீடியோ எடுத்தனர். அது தொடர்பில் ஊடகவியளாலர்கள் கேட்ட போது அவர்களை தள்ளி விட்டு மிரட்டல் விடுத்தனர்.

இந்நிலையில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு பாடசாலைக்குள் தடுத்து வைத்திருக்கும் மாணவிகளை மீட்டு தருமாறு பெற்றோர் அறிவித்து இருந்தனர்.

அதனை அடுத்து அங்கு வந்த மனித உரிமை ஆணைக்குழுவை சேர்ந்தவர்களையும் பாடசாலைக்குள் செல்வதற்கு பொலிஸார் அனுமதி மறுத்திருந்தனர்.

அதனை அடுத்து மனித உரிமை ஆணைக்குழுவை சேர்ந்தவர்கள். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்து தாம் பாடசாலைக்குள் சென்று மாணவிகளை சந்திப்பதற்கான அனுமதியினை பெற்றுக்கொண்டனர்.
87135-police-06 87135-police-09 87135-police-10 87135-police-12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com